Saturday, September 16, 2017

புதன் கிழமை

விநாயகர்

வக்ர துண்ட மஹாகாய
      சூர்ய கோடி ஸமப்ரப
அவிக்னம் குருமே தேவ
       ஸர்வ கார்யேஷு ஸர்வதா

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
       நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
       சங்கத் தமிழ் மூன்றும் தா.


முருகன்

கந்த புராணம்
ஆறிரு தடந்தோள் வாழ்க
      ஆறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க
       குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க
        யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க
        வாழ்க சீர் அடியாரெல்லாம்.


சிவன்

வேண்டாத தக்க தறிவோய் நீ
        வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற் கரியோய் நீ
         வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள் செய்தாய்
          யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
           அதுவும் உன்தன் விருப்பன்றே.

நந்தி காயத்ரீ
ஓம் தத்புருஷாய வித்மஹே சக்ரதுண்டாய தீமஹி
தந்நோ நந்தி: ப்ரசோதயாத்

அம்பாள்

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
       அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
       பணியேன் ஒருவரை நின்பத்மபாதம் பணிந்தபின்னே.

சரஸ்வதி துதி
வெள்ளை கலையுடித்தி  வெள்ளை பணிபூண்டு
       வெள்ளை கமலத்தில் வீற்றிருப்பாள்
வெள்ளை அரியாசனத்தில் அரசரோடு என்னை
       சரியாசனம் வைத்த தாய்

சரஸ்வதீ நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர்பவதுமே ஸதா.


விஷ்ணு

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
       தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
       இம்மையே ராமா வென இவ்விரண்டெழுத்தினால்.

ஸ்ரீ ராம காயத்ரீ
ஓம் தாசரதாய  வித்மஹே சீதாவல்லபாய தீமஹி
தந்நோ ராம: ப்ரசோதயாத்.

விஷ்ணு சஹஸ்ரநாமம் (எண்ணிய காரியம் நிறைவேற)
ஸித்தார்த்த: ஸித்தஸங்கல்ப:
ஸித்தித: ஸித்தி ஸாதந:

நவக்ரஹம் | புதன்

இதமுற வாழ இன்னல்கள் நீக்கும்
       புத பகவானே பொன்னடி போற்றி
பதந்தந் தருள்வாய் பண்ணொலியானே
       உதவியே யருளும் உத்தமா போற்றி.

புத காயத்ரீ
ஓம் கஜ த்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத: ப்ரசோதயாத்.

புத ஸ்துதி
ப்ரியங்கு கலிகாச்யாமம் ரூபேணாப்ரதிமம் புதம்
ஸௌம்யம் சௌம்ய குணோபேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம்.

No comments:

Post a Comment