Saturday, September 16, 2017

திங்கட் கிழமை

விநாயகர்

கஜா நநம் பூத கணாதி ஸேவிதம்
      கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
      நமாமி விக்நேச் வர பாத பங்கஜம்


திருமந்திரம்
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின் றேனே

முருகன் 

முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே - ஒரு கை முகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கை தொழுவேன் நான்.


மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்
      மனோஹரி தேஹம் மஹச்சித்த கேஹம் /
மஹீதேவ தேவம் மஹாவேதபாவம்
      மஹாதேவபாலம் பஜே லோகபாலம் //


சிவன் 

திருமந்திரம்
சீவனோடொக்குந்  தெய்வந் தேடினுமில்லை
     அவனோ டொப்பாரிங்கு யாவருமில்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
      தவனச் சடைமுடித் தாமரை யானே.

அன்புஞ் சிவமு மிரண்டென்பரறிவிலார்
       அன்பே சிவமாவ தாரு மறகிலார்
அன்பே சிவமாவ தாரு மறந்தபின்
        அன்பே சிவாமா யமர்ந்திருந்தாரே.

ஈஸ்வர தியானம்
ஓம் நம: சிவாய பரமேஸ்வராய  ஸஸி ஸேகராய நம:
ஓம் பவாய குண ஸம்பவாய சிவ தாண்டவாய நம ஓம்.


அம்பாள் 

அபிராமி அந்தாதி
பூத்தவளே புவனம் பதி
      னான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே
       கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா
       முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி
        மற்றோர் தெய்வம் வந்திப்பதே

 ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்துதி
ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்தஸாதிகே
சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே


விஷ்ணு

நான்காந் திருமொழி
அச்சுதன் அமலன் என்கோ
       அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மாமருந்தும் என்கோ
        நலங்கடல் அமுதம் என்கோ
அச்சுவை கட்டி என்கோ
        அறுசுவை அடிசில் என்கோ
நெய்ச் சுவை தேறல் என்கோ
         கனிஎன்கோ  பால் என்கேனோ.

ராம மந்திரம்
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே.


சந்திரன்

எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் தருவாய்
சந்திரா போற்றி சத்குரு போற்றி
சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி.

சந்திர காயத்ரீ 
ஓம் பத்ம த்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி
தந்நோ ஸோம: ப்ரசோதயாத்

சந்திர ஸ்துதி
ததிசங்க துஷாராபம் க்ஷிரோதார்ணவ ஸம்பவம்
நமாமி சசிநம் ஸோமம் சம்போர் முகுடபூஷணம்



No comments:

Post a Comment