Sunday, September 17, 2017

விஷ்ணு ஸ்லோகங்கள்

விஷ்ணு ஸ்லோகங்கள் 


திவ்ய பிரபந்தம் | தொண்டரடி பொடியாழ்வார் அருளி செய்த திருமாலை 
பச்சைமா மலைபோல் மேனி
     பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர்தம்
    கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
     இந்திரலோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
      அரங்கமா நகருளானே.


நான்காந் திருமொழி
அச்சுதன் அமலன் என்கோ
       அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மாமருந்தும் என்கோ
        நலங்கடல் அமுதம் என்கோ
அச்சுவை கட்டி என்கோ
        அறுசுவை அடிசில் என்கோ
நெய்ச் சுவை தேறல் என்கோ
         கனிஎன்கோ  பால் என்கேனோ.


ராம மந்திரம்
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே.


நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
       தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
       இம்மையே ராமா வென இவ்விரண்டெழுத்தினால்.


நாலாயிர திவ்ய பிரபந்தம் | திருமங்கை ஆழ்வார்
குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்
       படுதுயர் ஆயின எல்லாம்
நிலம் தரும் செய்யும் நீள் விசும்பருளும்
       அருளோடு பெருநிலம்  அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
       தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
       நாராயணா என்னும் நாமம்.
                                                                                                                                     

விஷ்ணு சஹஸ்ரநாமம் (எண்ணிய காரியம் நிறைவேற)
ஸித்தார்த்த: ஸித்தஸங்கல்ப:
ஸித்தித: ஸித்தி ஸாதந:


வஸுதேவஸுதம் தேவம் கம்ஸசாணூர மர்தனம்
தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்


திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
       அருக்கன் அணிநிறமுங் கண்டேன் செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
       என்னாழி வண்ணன்பால் இன்று.


சாந்தாகாரம் புஜக சயனம் பத்மநாபம் ஸுரேசம்
       விச்வாதாரம் ககன ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீ காந்தம் கமலநயனம் யோகிஹ்ருத்யானகம்யம்
       வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வ லோகைகநாதம்.



ஸ்ரீ நிவாஸா கோவிந்தா ஸ்ரீ  வேங்கடேசா கோவிந்தா
திருப்பதிவாசா கோவிந்தா திருமலைவாசா கோவிந்தா
பாண்டுரங்கா கோவிந்தா பண்டரீநாதா கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா சங்கடஹரணா கோவிந்தா
புராணபுருஷா கோவிந்தா புண்டரீகாக்ஷ கோவிந்தா



விஷ்ணு காயத்ரீ

நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி/
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத் //

ஸ்ரீ ராம காயத்ரீ

ஓம் தாசரதாய  வித்மஹே சீதாவல்லபாய தீமஹி
தந்நோ ராம: ப்ரசோதயாத்.

ஸ்ரீ ந்ருஸிம்ஹ காயத்ரீ

ஓம் வஜ்ரநாகாய வித்மஹே தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ ந்ருஸிம்ஹ: ப்ரசோதயாத்.

ஹயக்ரீவ காயத்ரீ

ஓம் வாகீச்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ஸ: ப்ரசோதயாத்.

கருடன் காயத்ரீ

ஓம் தத்புருஷாய வித்மஹே ஸ்வர்ணபக்ஷய தீமஹி
தந்நோ கருட: ப்ரசோதயாத்.

No comments:

Post a Comment