Monday, November 27, 2017

ஏகாதசி விரதம்


ஏகாதசி விரதம் என்பது ஏகாதசி தினத்தில் இந்துக்கள் விரதமுறையைக் கடைப்பிடித்து திருமாலை வழிபடுவதைக் குறிக்கும்.

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி மற்றும் அமாவாசையை அடுத்து வரும் பதினொன்றாம் நாள் ஏகாதசி தினம் என்றழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பொதுவாக 24 ஏகாதசிகள் வருகின்றன. ஏதாவது ஒரு சமயத்தில் 25 ஏகாதசிகள் வரும்.

ஏகாதசிகளில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரம் இல்லை ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை என்ற பழமொழியின் மூலம் இவ்விரதத்தின் சிறப்பினை அறியலாம்.

ருக்மாங்கதன், அம்பரீஷன் ஆகிய மன்னர்கள் இவ்விரத முறையினைக் கடைப்பிடித்து பெரும் பாக்கியம் பெற்றவர்கள் ஆவார்.

அமாவாசையை அடுத்து வரும் ஏகாதசி சுக்லபட்ச ஏகாதசி அல்லது வளர்பிறை ஏகாதசி என்றும், பௌர்ணமியை அடுத்து வரும் ஏகாதசி கிருஷ்ணபட்ச ஏகாதசி அல்லது தேய்பிறை ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

ஏகாதசி அன்று விரதமுறையைப் பின்பற்றி வழிபாடு செய்யப்படுவதால் உடல் மற்றும் உள்ளம் தூய்மை அடைகிறது.

இவ்விரத முறையை ஆண், பெண், ஏழை, பணக்காரர் ஆகிய வேறுபாடுகள் ஏதும் இன்றி எல்லோரும் இவ்விரதத்தினைக் கடைப்பிடிக்கலாம். எல்லா காலங்களிலும் (தீட்டுக்காலங்கள் உட்பட) இவ்விரத முறையினைக் கடைப்பிடிக்கலாம் என்பது இதனுடைய சிறப்பாகும்.

 

மாத ஏகாதசியின் பெயர்கள் மற்றும் பலன்கள்

சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி

சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி காமதா ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. இது நமது விருப்பங்களை நிறைவேறும். திருமணப் பேற்றினை அளிக்கும்.

 

சித்திரை மாத தேய்பிறை ஏகாதசி

சித்திரை மாத தேய்பிறை ஏகாதசி பாப மோசனிகா ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. இது நம்முடைய பாவங்களைப் போக்கி நற்பேற்றினை நல்கும்.

 

வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி

வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி மோஹினி ஏகாதசி என்ழைக்கப்படுகிறது. இது உடல் சோர்வினை நீக்கி உடலுக்கு உறுதியளிக்கும். வளர்ச்சிக்கான எண்ணங்களை வெற்றி பெறச் செய்யும்.

 

வைகாசி மாத தேய்பிறை ஏகாதசி

வைகாசி மாத தேய்பிறை ஏகாதசி வரூதினி ஏகாதசி என்ழைக்கப்படுகிறது. இது வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சௌபாக்கியங்களையும் கிடைக்கச் செய்யும். உடலின் ஆரோக்கியத்தை மேம்படச் செய்யும்.

 

ஆனி மாத வளர்பிறை ஏகாதசி

ஆனி மாத வளர்பிறை ஏகாதசி நிர்ஜனா ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. இது பீம ஏகாதசி எனவும் வழங்கப்படுகிறது. பீமன் ஆழ்மனதில் இறைவனை நினைத்து வழிபாடு செய்து பலன் பெற்ற நாள்.

இது வாழ்வின் அனைத்து வெற்றிகளையும் எல்லா ஏகாதசிகளின் பலத்தினையும் அருளும். இந்நாளில் நீர் அருந்தாமல் விரத முறை மேற்கொள்வது சிறப்பு.

 

ஆனி மாத தேய்பிறை ஏகாதசி

ஆனி மாத தேய்பிறை ஏகாதசி அபரா ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. இது குரு நிந்தனை, பொய் சாட்சி போன்ற பாவங்களைப் போக்கும். இவ்விரதம் சிவராத்திரி விரத புண்ணியத்தைக் கொடுக்கும்.

 

ஆடி மாத வளர்பிறை ஏகாதசி

ஆடி மாத வளர்பிறை ஏகாதசி சயநீ ஏகாதசி ஆகும். இது தெய்வீக சிந்தனையை அதிகமாக்கும். நமக்கு விருப்பமான நல்ல சக்திகளைத் தரவல்லது. இன்றைய தினத்தில் ஆடை தானம் குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

 

ஆடி மாத தேய்பிறை ஏகாதசி

ஆடி மாத தேய்பிறை ஏகாதசி யோகினி என்றழைக்கப்படுகிறது. இது நோய்களை நீக்கும். இன்றைய தினத்தில் வெள்ளி அல்லது வெண்கல விளக்கு தானம் நல்ல வளமான வாழ்கையைத் தரும்.

 

ஆவணி மாத வளர்பிறை ஏகாதசி

ஆவணி மாத வளர்பிறை ஏகாதசி புத்ரதா என்றழைக்கப்படுகிறது. இது நற்புத்திர பாக்கியத்தைக் கொடுக்கும். குழந்தைகள் கல்வியில் சிறக்கவும், நல்ல மாணவ மாணவியராகத் திகழவும் இன்றைய தினம் விரதம் சிறந்த பலனைக் கொடுக்கும்.

 

ஆவணி மாத தேய்பிறை ஏகாதசி

ஆவணி மாத தேய்பிறை ஏகாதசி காமிகா என்றழைக்கப்படுகிறது. இது நமது விருப்பங்களை நிறைவேற்றும். மன பயம், மரண பயம், கொடிய துன்பம் ஆகியவற்றை நீக்கும்.

ஆவணி மாத ஏகாதசி விரதத்தினை காய்கறிகளைப் பயன்படுத்தாமல் பழங்களை மட்டும் பயன்படுத்தி விரதமுறையை மேற்கொள்ள வேண்டும்.

 

புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி

புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி பத்மநாபா ஆகும். இது நீர் வளத்தினைப் பெருக்கி பஞ்சம் ஏற்படாமல் தடுக்கும்.

 

புரட்டாசி மாத தேய்பிறை ஏகாதசி

புரட்டாசி மாத தேய்பிறை ஏகாதசிக்கு அஜா என்ற பெயர். இது இழந்ததை திரும்ப அளிக்கும். சுட்பிச்சமான ஒற்றுமையான குடும்ப வாழ்வை நல்கும். அரிசந்திரன் இந்நாளில் விரதம் மேற்கொண்டு மனைவி, மக்கள், அரசாட்சி ஆகிய அனைத்தையும் பெற்றான். இவ்விரத்தில் தயிர் உபயோகிக்கக் கூடாது.

 

ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி

ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி பாபாங்குசா எனப்படுகிறது. இது பாவங்களைப் போக்கும். கங்கையில் நீராடிய பலனைக் கொடுக்கும். நோய், பசிப்பிணி நீங்கும். நிம்மதி நிலைக்கும்.

 

ஐப்பசி மாத தேய்பிறை ஏகாதசி

ஐப்பசி மாத தேய்பிறை ஏகாதசி இந்திரா என்றழைக்கப்படுகிறது. இது மூதாதையர்களுக்கு நற்கதி அளிக்கும். இவ்விரத நாளில் பால் அருந்தக் கூடாது.

 

கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி

கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி ப்ரமோதினி எனப்படுகிறது. இது கைசிக ஏகாதசி என்றும் வழங்கப்படுகிறது. இது உயர்ந்த நன்மைகளை வழங்கும். பூலோகத்தில் சொர்க்க வாழ்வு கிடைக்கும்.

 

கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசி

கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசி ரமா எனப்படும். இது உயர்ந்த பதவிகளைக் கொடுக்கும். இன்றைய தின விரதம் இருபத்தியோரு தான பலன்களைக் கொடுக்கும்.

 

மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி

மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி எனப்படுகிறது. இது மோட்ச ஏகாதசி என்றும் வழங்கப்படுகிறது. இது வைகுண்ட பதவியை அளிக்கும்.

 

மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி

மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி உற்பத்தி ஏகாதசி எனப்படுகிறது. இது சகல சௌபாக்கியங்களை கொடுக்கும். பகையை வெல்ல உதவும்.

 

தை மாத வளர்பிறை ஏகாதசி

தை மாத வளர்பிறை ஏகாதசி புத்ரா எனப்படும். இது குழந்தைச் செல்வத்தை அளிக்கும். வம்சாவளியைப் பெருகச் செய்யும் சந்தான ஏகாதசி ஆகும். சுகேதுமான் இந்நாளில் விரதம் மேற்கொண்டு குழந்தையைப் பெற்றான்.

 

தை மாத தேய்பிறை ஏகாதசி

தை மாத தேய்பிறை ஏகாதசி ச‌பலா ஏகாதசி எனப்படும். இது பாவநிவர்த்தி கொடுக்கும். இன்றைய தினத்தில் பழங்கள் தானம் செய்வதால் ஒளிமயமான வாழ்க்கை கிடைக்கும். இல்லறம் இனிக்கும்.

 

மாசி மாத வளர்பிறை ஏகாதசி

மாசி மாத வளர்பிறை ஏகாதசி ஜயா எனப்படும். இது பேய்க்கும் மோட்சத்தைக் கொடுக்கும். மால்யவான் பேயான சாபத்திலிருந்து விடுதலை பெற்றான். மன உளைச்சல் அகலும். வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி அகலும்.

 

மாசி மாத தேய்பிறை ஏகாதசி

மாசி மாத தேய்பிறை ஏகாதசி ஷட்திலா எனப்படும். இது அன்ன தானம் செய்ய உயர்ந்தது. பசி துயரம், உணவுப் பஞ்சம் ஏற்படாது. பிரம்மஹத்தி தோசத்தை போக்கும்.

 

பங்குனி மாத வளர்பிறை ஏகாதசி

பங்குனி மாத வளர்பிறை ஏகாதசி ஆமலதீ என்றழைக்கப்படுகிறது. இது கோ தானம் செய்ய ஏற்றது.

 

பங்குனி தேய்பிறை ஏகாதசி

பங்குனி மாத தேய்பிறை ஏகாதசி விஜயா என்றழைக்கப்படுகிறது. இது கணவன் மனைவி கடல் கடந்து பிரிந்து இருந்தாலும் அவர்களை ஒன்றிணைக்கும். இராமர் இவ்விரதத்தினை மேற்கொண்டே சீதையை மீட்டார்.

 

கமலா ஏகாதசி

ஏதேனும் ஒரு வருடத்தில் கூடுதலாக வரும் 25-வது ஏகாதசி கமலா ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. இந்நாளில் விரதம் மேற்கொண்டால் திருமகளின் பரிபூரண அருள் கிடைக்கும். எல்லாச் செல்வங்களும் நம்மை வந்து சேரும்.

நாமும் ஏகாதசி விரதம் மேற்கொண்டு வாழ்வின் உன்னத நிலையை அடைவோம்.

Sunday, November 26, 2017

ஸ்ரீ ந்ருஸிம்ஹ த்வாதசநாம ஸ்தோத்ரம்

ந்ருஸிம்ஹனைப் பற்றிய இந்தப் பன்னிரண்டு நாமாக்களைத் தினமும் பக்தியுடன் ஜபித்தால், எல்லா ஆபத்துக்களிளிருந்தும் நிச்சயம் காப்பாற்றுகிறான். 

ப்ரதமஸ்து  மஹோஜ்வாலோ 
த்விதீயஸ் தூக்ரகேஸரீ
த்ருதீய : க்ருஷ்ண பிங்காக்ஷ :
சதுர்த்தஸ்து  விதாரண : 
பஞ்சாஸ்ய :  பஞ்சமைஸ் சைவ 
ஷஷ்ட : கஸிபுமர்தந  :
ஸப்தமோ  தைத்யஹந்தாச 
அஷ்டமோ தீநவல்லப :
நவம : ப்ரஹ்லாதவரதோ 
தசமோ நந்தஹஸ்தக :
ஏகாதச மஹாரௌத்ரோ
த்வாதஸ : கருணாநிதி :
த்வாதஸைதாநி  நாமாநி  
ந்ருஸிம்ஹஸ்ய  மஹாத்மந :

Saturday, November 25, 2017

ஏகாதசி சேவா கால திவ்ய பிரபந்த பாசுரங்கள்

(1)

திருக்கண்டேன் * பொன்மேனி கண்டேன், *

திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன், -

* செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் *

புரி சங்கம் கைக்கண்டேன் * என்னாழி வண்ணன்பால் இன்று *

(2)

சென்னியோங்கு * தண்திருவேங்கடமுடையாய். *

உலகு தன்னைவாழநின்றநம்பீ. * தாமோதரா! சதிரா !.*

என்னையும் என்னுடைமையையும் * உன் சக்கரப்பொறியொற்றிக்கொண்டு *

நின்னருளே புரிந்திருந்தேன் * இனிஎன்திருக்குறிப்பே?

(3)

ஆரா அமுதே!. அடியேன் உடலம் * நின்பால் அன்பாயே, *

நீராய் அலைந்து கரைய * உருக்குகின்ற நெடுமாலே, *

சீரார் செந்நெல் கவரி வீசும் * செழுநீர்க் திருகுடந்தை, *

ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்! * கண்டேன் எம்மானே! *

(4)

பச்சைமா மலைபோல் மேனி * பவளவாய் கமலச் செங்கண் *

அச்சுதா! அமரர் ஏறே! * ஆயர்தம் கொழுந்தே ! என்னும் *

இச்சுவை தவிர யான்போய் * இந்திர லோகம் ஆளும், *

அச்சுவை பெறினும் வேண்டேன் * அரங்கமா நகர் உளானே. *

(5)

கொண்டல் வண்ணனைக் * கோவல னாய்வெண்ணெய்

உண்ட வாயன் * என்னுள்ளம் கவர்ந்தானை, *

அண்டர் கோன் அணி அரங்கன் * என் அமுதினைக்

கண்ட கண்கள் *, மற்றொன்றினைக் * காணாவே. *

(6)

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் * யாதும் இல்லா அன்று *

நான்முகன் தன்னொடு * தேவர் உலகோடு உயிர் படைத்தான் *

குன்றம் போல் மணி மாடம் நீடு * திருக்குருகூர் அதனுள் *

நின்ற ஆதிப்பிரான் நிற்க * மற்றைத் தெய்வம் நாடுதிரே *

(7)

முனியே! நான்முகனே ! * முக்கண்ணப்பா *

என் பொல்லாக் கனிவாய்த் * தாமரைக் கண் கருமாணிக்கமே.

என்கள்வா! * தனியேனாருயிரே. எந்தலை மிசையாய் வந்திட்டு *

இனிநான் போகலொட்டேன் * ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே * .

(8)

குலம்தரும் செல்வம் தந்திடும் * அடியார் படுதுயராயினவெல்லம் *,

நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் * அருளொடு பெருநிலமளிக்கும், *

வலந்தரும் மற்றுந்தந்திடும் * பெற்ற தாயினுமாயினசெய்யும் *

நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன் * நாராயணா என்னும் நாமம் *

(9)

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் * மாலிருஞ் சோலையென்னும்

பொருப்பிடம் * மாயனுக்கு என்பர் நல்லோர், * அவை தன்னொடு வந்து

இருப்பிடம் மாயன் இராமானுசன் மனத்து * இன்று அவன் வந்திருப்பிடம் *

என்றன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே *

(10)

இன்புற்ற சீலத்து இராமானுச * என்றும் எவ்விடத்தும்

என்புற்ற நோய் * உடல் தோறும் பிறந்து இறந்து *

எண்ணரிய துன்புற்று வீயினும் சொல்லுவது ஒன்றுண்டு * உன்

தொண்டர்கட்கே அன்புற்று இருக்கும் படி * என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே 

தன்வந்த்ரி ஸ்லோகம்

ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய
சர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ

நோய்கள் நீங்க சொல்ல வேண்டிய ஸ்லோகமிது. இதன் தமிழ் விளக்கம்

அமுதத்தை ஏந்திநிற்கும் அருள்கரத்தோய் சரணம்
குமதச் செல்வி மணவாளன் மறுவடிவே சரணம்
சேய் எங்கள் நோய் நீக்கி காத்திடுவாய் சரணம்
தாய் போலே தரணிக்கும் தன்வந்த்திரியே சரணம்

Sunday, November 19, 2017

பிறந்த நட்சத்திர ஸ்தலம்

வருடத்திற்கு ஒருமுறையாவது உங்களது பிறந்த நட்சத்திர ஸ்தலத்திற்கு உங்களின் நட்சத்திரம் வரும் நாளன்று சென்று வளம் பெறுங்கள்...

அஸ்வினி - முக்கிய ஸ்தலம் - கூத்தனூர்
மற்ற தலங்கள் - ஸ்ரீரங்கம், திருத்துறைபூண்டி,
கொல்லிமலை.

பரணி - முக்கிய ஸ்தலம் - நல்லாடை
மற்ற தலங்கள் - திருநெல்லிக்கா, கீழப்பறையார், பழனி, பட்டீஸ்வரம், திருத்தங்கல், திருவாஞ்சியம்.

கார்த்திகை - முக்கிய ஸ்தலம் - கஞ்சானகரம்
மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருப்புகலூர், கீரனூர், திருச்செந்தூர், திருவொற்றியூர், கானாட்டுமுள்ளூர்.

ரோஹிணி - முக்கிய ஸ்தலம் - திருக்கண்ணமங்கை
மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருவானைக்கோவில், ஜம்பை,
கழுகுமலை, செம்பாக்கம், கொரட்டூர்,
நெல்லிச்சேரி, மன்னார்குடி, பெருமாள் அகரம்,
திருவரங்கம், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி.

மிருகசீரிடம் - முக்கிய ஸ்தலம் - எண்கண்
மற்ற தலங்கள் - அம்பர் மாகாளம், ஓசூர், முசிறி, தாழமங்கை.

திருவாதிரை - முக்கிய ஸ்தலம் - சேங்காலிபுரம்
மற்ற தலங்கள் - சிதம்பரம், அதிராம்பட்டினம்.

புனர்பூசம் - முக்கிய ஸ்தலம் - சீர்காழி
மற்ற தலங்கள் - பழைய வாணியம்பாடி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பாசூர், திருவெண்ணெய்நல்லூர்.

பூசம் - முக்கிய ஸ்தலம் - திருச்சேறை
மற்ற தலங்கள் - விளங்குளம், ஒழுந்தியாபட்டு, ஆவூர், கோனேரிராஜபுரம், பரிதிநியமம், திருச்சுழி, அழகர் கோயில்.

ஆயில்யம் - முக்கிய ஸ்தலம் - திருப்புறம்பியம்
மற்ற தலங்கள் - திருந்துதேவன்குடி, நண்டான் கோயில், சங்கரன்கோயில், திருப்புனவாசல், புள்ளபூதக்குடி, திருவிடந்தை.

மகம் - முக்கிய ஸ்தலம் - திருவெண்காடு
மற்ற தலங்கள் - திருக்கச்சூர், திருவரத்துறை, கீழப்பழுவூர், ஆலம்பொழில், அன்பில், திருவாலங்காடு.

பூரம் - முக்கிய ஸ்தலம் - தலைசங்காடு
மற்ற தலங்கள் - நாலூர், கஞ்சனூர், திருவரங்குளம்,
புரசைவாக்கம்.

உத்திரம் - முக்கிய ஸ்தலம் - கரவீரம்
மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருவக்கரை, செய்யூர்,
கூவத்தூர், மயிலாடுதுறை, இடையாற்றுமங்கலம்.

ஹஸ்தம் - முக்கிய ஸ்தலம் - கோமல்
மற்ற தலங்கள் - தர்மபுரி, செய்யாறு, புவனகிரி, ஏமப்பூர் ,
எழிலூர், திருவாதவூர், திருவேற்காடு.

சித்திரை - முக்கிய ஸ்தலம் - திருவையாறு
மற்ற தலங்கள் - அண்ணன்கோயில், தாடிக்கொம்பு,
திருநாரயணபுரம், நாச்சியார் கோயில், திருவல்லம், திருவக்கரை,
திருக்கோயிலூர், திருமாற்பேறு.

சுவாதி - முக்கிய ஸ்தலம் - திருவிடைமருதூர்
மற்ற தலங்கள் - திருப்புடைமருதூர், பெரியதிருக்கோணம், கடத்தூர்,
பிள்ளையார்பட்டி, நயினார் கோயில், ஸ்ரீரங்கம்.

விசாகம் - முக்கிய ஸ்தலம் - கபிஸ்தலம்
மற்ற தலங்கள் - திருமலைக்கோயில், அத்தாளநல்லூர், தீயத்தூர்,
திருநன்றியூர், நத்தம்.

அனுஷம் - முக்கிய ஸ்தலம் - நாச்சியார் கோயில்
மற்ற தலங்கள் - திருவொற்றியூர், திருவண்ணாமலை,
திருப்புனவாசல், திருக்கண்ணமங்கை, நீடூர், திருநன்றியூர்.

கேட்டை - முக்கிய ஸ்தலம் - வழுவூர்
மற்ற தலங்கள் - பிச்சாண்டார் கோயில், பசுபதி கோயில், பல்லடம்,
திருப்பராய்த்துறை.

மூலம் - முக்கிய ஸ்தலம் - மயிலாடுதுறை
மற்ற தலங்கள் - மாந்துறை, ஆச்சாள்புரம், பாமணி, கோயிலூர்,
குலசேகரப்பட்டினம், பொழிச்சலூர், மம்பேடு.

பூராடம் - முக்கிய ஸ்தலம் - கடுவெளி
மற்ற தலங்கள் - நகர், சிதம்பரம், இரும்பை மகாகாளம்.

உத்திராடம் - முக்கிய ஸ்தலம் - இன்னம்பூர்
மற்ற தலங்கள் - கோயம்பேடு, காங்கேயநல்லூர், பேளூர், கீழ்பூங்குடி,
திருப்பூவனூர், திருக்கடிக்குளம், திருப்பூவணம், திருக்கோஷ்டியூர்,
திருக்குற்றாலம்.

திருவோணம் - முக்கிய ஸ்தலம் - திருவிடைமருதூர்.
மற்ற தலங்கள் - ராஜேந்திரப்பட்டினம், திருமுல்லைவாயில்,
திருப்பாற்கடல்.

அவிட்டம் - முக்கிய ஸ்தலம் - திருபூந்துருத்தி
மற்ற தலங்கள் - விருதாச்சலம், திருவான்மியூர்,
திருக்காட்டுப்பள்ளி, திருகொள்ளிக்காடு, திருமறைக்காடு,
கொடுமுடி.

சதயம் - முக்கிய ஸ்தலம் - திருப்புகலூர்
மற்ற தலங்கள் - கடம்பனூர், கோயில் கடம்பனூர், ஆதி கடம்பனூர்,
இளங்கடம்பனூர், வாழிக்கடம்பனூர், பெருங்கடம்பனூர்,
கடம்பர் கோயில், மேலக்கடம்பூர் , பிச்சாண்டார் கோயில், மதுரை.

பூரட்டாதி - முக்கிய ஸ்தலம் - திருக்குவளை
மற்ற தலங்கள் - ரெங்கநாதபுரம்.

உத்திரட்டாதி - முக்கிய ஸ்தலம் - திருநாங்கூர்.
மற்ற தலங்கள் - தீயாத்தூர், வைத்தீஸ்வரன் கோயில்.

ரேவதி - முக்கிய ஸ்தலம் - இலுப்பைப்பட்டு
மற்ற தலங்கள் - காருகுடி, இரும்பை மாகாளம்,
திருச்செங்கோடு.

நாராயணின் 24 திருநாமங்கள்

பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன இறைத் திருநாமங்கள்

யார் ஒருவர் தினமும் நாராயணின் 24 திருநாமங்களை ஜபிக்கிறார்ளோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜயோகம் கைகூடுவதோடு , பிறவி முடிந்த பின்னும், மேலுலக இன்பங்களை அனுபவித்து, இறுதியில் நாராயணணின் திருவடிகளை அடையலாம்.

அந்த எளிமையானத் திருநாமங்களைக் காலையில் நீராடியவுடனும் , மாலையில் விளக்கேற்றியவுடனும் சொல்லலாம். தினமும் ஜபிக்கும்போது, துளசியும் ' சுத்தமான நீரும் நைவேத்தியமாக வைத்து , வழிபட்டால் போதும்.

24 திருநாமங்கள்

ஓம் கேசவாய நமஹ :
ஓம் சங்கர்ஷனாய நமஹ :
ஓம் நாராயணாய. நமஹ :
ஓம் வாசுதேவாய. நமஹ :
ஓம் மாதவாய. நமஹ 
ஓம் ப்ரத்யும்னாய. நமஹ :
ஓம் கோவிந்தாய. நமஹ :
ஓம் அனிருத்தாய. நமஹ :
ஓம் விஷ்ணவே நமஹ 
ஓம் புருஷோத்தமாய. நமஹ:
ஓம் மதுசூதனாய. நமஹ :
ஓம் அதோக்ஷஜாய. நமஹ :
ஓம் த்ரிவிக்ரமாய. நமஹ :
ஓம் லக்ஷ்மி நரசிம்ஹாய. நமஹ :
ஓம் வாமனாய. நமஹ :
ஓம் அச்சுதாய. நமஹ :
ஓம் ஸ்ரீதராய. நமஹ :
ஓம் ஜனார்தனாய நமஹ :
ஓம் ஹ்ரிஷீகேசாய. நமஹ :
ஓம் உபேந்த்ராய. நமஹ :
ஓம் பத்மநாபாய. நமஹ :
ஓம் ஹரயே நமஹ :
ஓம் தாமோதராய. நமஹ :
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ

Saturday, November 11, 2017

கால பைரவர் ஸ்லோகங்கள்

கால பைரவர் காயத்ரீ


ஓம் காலகாலாய வித்மஹே
காலாதீதாய தீமஹி   
தந்நோ கால பைரவ ப்ரசோதயாத்.

ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் காயத்ரீ

ஓம் பைரவாய வித்மஹே ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி
தந்நோ ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்.

ஶ்ரீ கால பைரவாஷ்டகம்
(ஶ்ரீ சங்கராச்சாரியார் அருளியது)

தேவராஜ ஸேவ்யமான பாவனாங்க்ரி பங்கஜம்
வ்யாள யக்ஞ சூத்ரம் இந்து ஸேகரம் க்ருபாகரம்
நாரதாதி யோகிப்ருந்த வந்திதம் திகம்பரம்
காசிகாபு ராதிநாத காலபைரவம் பஜே

பானுகோடி பாஸ்வரம் பவாப்தி தாரகம் பரம்
நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோசனம்
காலகாலமம் புஜாக்ஷமஸ்த ஸூன்ய மக்ஷரம்
காசிகாபுராதி நாத காலபைரவம் பஜே

ஸூவ டங்க பாச தண்ட பாணிமாதி காரணம்
ச்யாம காயமாதி தேவமக்ஷரம் நிராமயம்
பீம விக்ரமம் ப்ரபும் விசித்ர தாண்டவப்ரியம்
காசிகா புராதி நாத கால பைரவம் பஜே

புக்தி முக்தி தாயகம் ப்ரஸஸ்த சாரு விக்ரஹம்
பக்த வத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்த லோக விக்ரஹம்
நிக்வணன் மனோக்ஜ ஹேம கிங்கிணீ வஸத்கடிம்
காசிகா புராதி நாத கால பைரவம் பஜே

தர்ம ஸேது பாலகம் த்வதர்ம மார்க்க நாஸகம்
கர்ம பாஸ மோசகம் ஸுஸாமதாயகம் விபும்
ஸ்வர்ண வர்ண கேசஸ பாஸ ஸோபிதாங்க நிர்மலம்
காசிகாபு ராதிநாத கால பைரவம் பஜே

ரத்னபாதுகா ப்ரபாபிராம பாத யுக்மகம்
நித்யமத் விதீயமிஷ்ட தைவதம் நிரஞ்ஜனம்
மருத்யதர்ப நாசனம் கராள தம்க்ஷட்ர பூஷணம்
காசிகா புராதிநாத கால பைரவம் பஜே

பூதஸங்க நாயகம் விலாஸகீர்த்தி தாயகம்
காசிவாஸி லோக புண்ய பா ஸோதகம் விபும்
நிதி மார்க்க கோவிந்தம் புராதனம் ஜகத்பதிம்
காசிகா புராதிநாத கால பைரவம் பஜே

காலபைரவாஷ்டகம் படந்தியே மனோஹரம
ஞான முக்தி ஸாதகம் விசித்ரபுண்ய வர்த்தனம்
சோக மோஹ லோப தைன்ய கோப தாப நாசனம்
தே ப்ரயாந்தி காலபைரவாங்கரி ஸந்நிதம் த்ருவம்