Sunday, September 17, 2017

வெள்ளிக் கிழமை

விநாயகர்

ஸ்ரீ கணேச காயத்ரீ

ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்

11 ஆம்  திருமுறை
திருவாக்கும் செய்கருமம் கைகூடும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பேருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் யானை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை

முருகன்

கந்தர் அலங்காரம்
நாளென் செயும்வினை தானென்
      செயுமெனை நாடி வந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென்
      செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந்
      தண்டையுஞ்  சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு
     முன்னே வந்து தோன்றிடினே.

சிவன்

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
      சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
      செந்துவர்வாய் உமைபங்கன் திரு ஆலவாயான் திருநீறே

திருமுறை

சிவசிவ என்கிலர் தீவினையாளர்
      சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
      சிவசிவ என்னச் சிவகதி தானே

காலை - பிணி போக்கும் | நண்பகல் - தனம் தரும் | மாலை - பாவம் போக்கும் | அர்த்தசாமம் - வீடுபேறு அளிக்கும் 

அம்பாள்

அபிராமி அந்தாதி
கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர்
         கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும், குன்றாத இளமையும்,
         கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும்,
         தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும்,
         தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு
         துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
         தொண்டரொடு கூட்டு கண்டாய்,
அலை ஆழி அறிதுயிலும் மாயனது தங்கையே,
         ஆதி கடவூரின் வாழ்வே,
அமுத ஈசர் ஒரு பாகம் அகலாத சுக பாணி
         அருள்வாய் அபிராமியே!


சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த:  ப்ரபவிதும்
       ந செதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திது மபி
அதஸ் த்வா மாராத்யாம் ஹரி ஹர விரிஞ்சாதிபி ரபி
       ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத மக்ருத புண்ய: ப்ரபவதி


விஷ்ணு

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
       அருக்கன் அணிநிறமுங் கண்டேன் செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
       என்னாழி வண்ணன்பால் இன்று.

சாந்தாகாரம் புஜக சயனம் பத்மநாபம் ஸுரேசம்
       விச்வாதாரம் ககன ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீ காந்தம் கமலநயனம் யோகிஹ்ருத்யானகம்யம்
       வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வ லோகைகநாதம்.

ஹயக்ரீவ காயத்ரீ
ஓம் வாகீச்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ஸ: ப்ரசோதயாத்.


நவக்ரஹம் | சுக்ரன்

சுக்கிர மூர்த்தி சுபம் மிக ஈவாய்
     வக்கிரமின்றி வரம்மிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
     அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே.

சுக்ர காயத்ரீ
ஓம் அச்வ த்வஜாய வித்மஹே தநுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்.

சுக்ரன் ஸ்துதி
ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும்
ஸர்வசாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்கவம் ப்ரணமாம்யஹம்.

No comments:

Post a Comment