Sunday, September 17, 2017

சனிக் கிழமை

விநாயகர் 

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
       கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
        கற்பக எனவினை கடிதேகும்.


முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
        கலா தரவா தம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம்
அநாயகைக நாயகம் வினாஸிதேப தைத்யகம்
         நாதாஸூபாஸூ நாஸகம் நமாமி தம் வினாயகம்.


முருகன் 

ஏறுமயில் ஏறிவிளை யாடும்முகம் ஒன்றே
      ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுகம் ஒன்றே
      குன்றுருவவேல் வாங்கி நின்றமுகம் ஒன்றே
மாறுபாடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
       வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
        ஆதியரு ணாசலம் அமர்ந்த பெருமாளே.

சிவன் 

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
       பெண் ஆகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலைம்முழ அதிரும்
        அண்ணாமலை தொழுவார் வினை வழுவாவண்ணம் அறுமே.


நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமமாகி நின்ற ண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க


அம்பாள் 

அபிராமி அந்தாதி
தனம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.

புவனேஸ்வரி காயத்ரீ
ஓம் நாராயண்யை வித்மஹே புவனேஸ்வர்யை தீமஹி
தந்நோ தேவீ ப்ரசோதயாத்.

விஷ்ணு 

ஸ்ரீ நிவாஸா கோவிந்தா ஸ்ரீ  வேங்கடேசா கோவிந்தா
திருப்பதிவாசா கோவிந்தா திருமலைவாசா கோவிந்தா
பாண்டுரங்கா கோவிந்தா பண்டரீநாதா கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா சங்கடஹரணா கோவிந்தா
புராணபுருஷா கோவிந்தா புண்டரீகாக்ஷ கோவிந்தா

கருடன் காயத்ரீ
ஓம் தத்புருஷாய வித்மஹே ஸ்வர்ணபக்ஷய தீமஹி
தந்நோ கருட: ப்ரசோதயாத்.


நவக்ரஹம் | சனி 

சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா.

சனி காயத்ரீ
ஓம் காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்.

சனி ஸ்துதி
நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்.

No comments:

Post a Comment