Sunday, September 17, 2017

வியாழக் கிழமை

விநாயகர்

ஓம் கணாநாம் த்வா கணபதிஹும் ஹவாமஹே
       கவிம் கவீநாம் உபமஸ்ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மனாம் ப்ரஹ்மணஸ்பத
       ஆந ஸ்ருண் வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்!
ஓம் ஸ்ரீ மஹா கணபதியே நமஹ

“அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற் றிற்பிறந்த
       தொல்லைபோம் போகாத் துயரம்போம் – நல்ல
குணம் அதிக மாம் அருணைக் கோபுரத்துள் மேவும்
      கணபதியைக் கைதொழுதக் கால்.”

முருகன்

அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
      வெஞ்சமரில் ‘அஞ்சல்!’ எனவேல் தோன்றும் – நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
      ‘முருகா!’ என்று ஓதுவார் முன்.”

சிவன்

பெற்ற தாய்தனை மகமறந்தாலும்
       பிள்ளை யைப்பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
       உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
       கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
       நமச்சிவாயத்தை நான் மறவேனே


அம்பாள்

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
       பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கரும்புவில்லும்
       சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.

மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே ஸதா

யாதேவீஸர்வ பூதேஷு ஸ்ம்ருதிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

விஷ்ணு

வஸுதேவஸுதம் தேவம் கம்ஸசாணூர மர்தனம்
தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

ராகவேந்திரர்

ஸ்ரீ பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே.

ஆஞ்சநேயர்

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
        அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டுஅயலார் ஊரில்
        அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.

குரு 

குருர்ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர்தேவோ மஹேச்வர:
குருஸ்ஸாக்ஷத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:

குணமிகு வியாழ குரு பகவானே
      மகிழ்வுடன் வாழ மனமுவந்து அருள்வாய்
பிரகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா
      க்ரஹதோஷ மின்றிக் கடாக்ஷித் தருள்வாய்!

குரு காயத்ரீ
ஓம்வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாயதீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்.

குரு ஸ்துதி
தேவானாஞ் ச ரிக்ஷீணாஞ் ச குரும்காஞ்சன ஸந்நிபம்
புத்திபூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்

No comments:

Post a Comment