Sunday, September 17, 2017

சிவன் ஸ்லோகங்கள்



சிவன் ஸ்லோகங்கள் 


மாசில் வீணையும்  மாலை மதியமும்
      வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
      ஈசன் எந்தை இணையடி நீழலே.

நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
     நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
     நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.



திருமந்திரம்
சீவனோடொக்குந்  தெய்வந் தேடினுமில்லை
     அவனோ டொப்பாரிங்கு யாவருமில்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
      தவனச் சடைமுடித் தாமரை யானே.



அன்புஞ் சிவமு மிரண்டென்பரறிவிலார்
       அன்பே சிவமாவ தாரு மறகிலார்
அன்பே சிவமாவ தாரு மறந்தபின்
        அன்பே சிவாமா யமர்ந்திருந்தாரே.



தோடுடைய செவியன் விடைஏறி
       ஓர் தூவெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடி பூசி
      என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள்
      பணிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய
     பெம்மான் இவன் அன்றே.



வேண்டாத தக்க தறிவோய் நீ
        வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற் கரியோய் நீ
         வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள் செய்தாய்
          யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
           அதுவும் உன்தன் விருப்பன்றே.



பெற்ற தாய்தனை மகமறந்தாலும்
       பிள்ளை யைப்பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
       உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
       கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
       நமச்சிவாயத்தை நான் மறவேனே


மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
      சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
      செந்துவர்வாய் உமைபங்கன் திரு ஆலவாயான் திருநீறே


திருமுறை
சிவசிவ என்கிலர் தீவினையாளர்
      சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
      சிவசிவ என்னச் சிவகதி தானே

காலை - பிணி போக்கும் | நண்பகல் - தனம் தரும் | மாலை - பாவம் போக்கும் | அர்த்தசாமம் - வீடுபேறு அளிக்கும் 



உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
       பெண் ஆகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலைம்முழ அதிரும்
        அண்ணாமலை தொழுவார் வினை வழுவாவண்ணம் அறுமே.



நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமமாகி நின்ற ண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க



சிவ காயத்ரீ

ஓம் மஹாதேவாய வித்மஹே ருத்ர மூர்த்தியே தீமஹி
தன்னஸ் சிவ: ப்ரசோதயாத்.


ஸ்ரீ ருத்ர காயத்ரீ

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி/
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்//


நந்தி காயத்ரீ

ஓம் தத்புருஷாய வித்மஹே சக்ரதுண்டாய தீமஹி
தந்நோ நந்தி: ப்ரசோதயாத்


ஈஸ்வர தியானம்

ஓம் நம: சிவாய பரமேஸ்வராய  ஸஸி ஸேகராய நம:
ஓம் பவாய குண ஸம்பவாய சிவ தாண்டவாய நம ஓம்.



No comments:

Post a Comment