Saturday, September 16, 2017

செவ்வாய்க் கிழமை

விநாயகர் 

மூஷிக வாஹந மோதக ஹஸ்த
         சாமர கர்ண விலம்பித சூத்ர
வாமந ரூப மஹேச்வர புத்ர
          விக்ந விநாயக பாத நமஸ்தே


விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
        விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
        தன்மையினால்  கண்ணில்  பணிமின் கனிந்து.

முருகன்

ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்
      பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
      சாடும் தனியானைச் சகோதரனே.

கந்தர் அநூபூதி
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
       மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
       குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

சிவன்

தோடுடைய செவியன் விடைஏறி
       ஓர் தூவெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடி பூசி
      என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள்
      பணிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய
     பெம்மான் இவன் அன்றே.


சிவ காயத்ரீ
ஓம் மஹாதேவாய வித்மஹே ருத்ர மூர்த்தியே தீமஹி
தன்னஸ் சிவ: ப்ரசோதயாத்.


அம்பாள்

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை
      என்றுநீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச்
     சுகமதை தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து
     பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
    துக்க நிவாரணி காமாட்க்ஷி !

ஸ்ரீ துர்கா காயத்ரீ
ஓம் காத்யாயநாய வித்மஹே கன்யாகுமரி தீமஹி
தந்நோ துர்கி: ப்ரசோதயாத்.


விஷ்ணு

நாலாயிர திவ்ய பிரபந்தம்
குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்
       படுதுயர் ஆயின எல்லாம்
நிலம் தரும் செய்யும் நீள் விசும்பருளும்
       அருளோடு பெருநிலம்  அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
       தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
       நாராயணா என்னும் நாமம்.
                                                                                                                                       (திருமங்கை ஆழ்வார்)

ஸ்ரீ ந்ருஸிம்ஹ காயத்ரீ
ஓம் வஜ்ரநாகாய வித்மஹே தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ ந்ருஸிம்ஹ: ப்ரசோதயாத்.


செவ்வாய்

சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
      குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ
மங்களச் செவ்வாய் மலரடி போற்றி
     அங்காரகனே அவதிகள் நீக்கு

அங்காரக காயத்ரீ
ஓம் வீரத்வஜாய வித்மஹேவிக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பௌம: ப்ரசோதயாத்.

அங்காரக ஸ்துதி
தரணீகர்ப்ப ஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம்
குமாரம்சக்திஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம்

No comments:

Post a Comment